Advertisment

பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் அல்ல... எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி பதிலடி! 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700- லிருந்து 23,077 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி, வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கரோனாவை இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை.

Advertisment

dmk

இந்த நிலையில் தருமபுரி திமுக எம்.பி டாக்டர்செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தருமபுரி பகுதியில் கரோனா தொற்று பரவியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் "இன்று தருமபுரியில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ,என் தொகுதியைச் சார்ந்த இவர் ஏழை. சிலர் சொன்னது போல் இது ஒன்றும் பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் அல்ல. சிந்தித்து பாருங்கள் இதே போல் தான் இன்று தமிழகத்தில் 1,683 பேருக்கு கரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் ஏழைகளே!" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கு திமுகவினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

issues coronavirus loksabha eps admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe