ADVERTISEMENT

திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைகிறது?

12:43 PM Jun 22, 2019 | Anonymous (not verified)

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் திமுக 23 இடங்களையும், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 10 இடங்களில் 09 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இருப்பதால் அதிமுக சார்பாக யாகமும், திமுக சார்பாக போராட்டமும் இன்று நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தண்ணீர் பிரச்சினையை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் திருச்சி மாவட்ட திமுக போராட்டம் நடத்தப்பட்டது . இதில் கலந்து கொண்டு பேசிய கே.என் நேரு வருகிற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள் தான் திமுக பல்லாக்கு தூக்குவது? எனவும் பேசினார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


மேலும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருச்சியிலாவது திமுக தனித்து போட்டியிட, ஸ்டாலினை வலியுறுத்துவேன் என கே.என் நேரு பேசினார். இதற்கு முன்பு உதயநிதி திருச்சியில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நாங்குநேரி இடைத்தேர்தல் தொகுதியை காங்கிரஸ் திமுகவிற்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்படத்தக்கது.நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நாங்குநேரி இடைத்தேர்தல் தொகுதியை காங்கிரஸ் திமுகவிற்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்படத்தக்கது. இன்று திமுகவின் கே.என். நேரு உள்ளாட்சி தேர்தலில் தனித்து திமுக போட்டியிட வேண்டும் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT