இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தின் கதை பஞ்சமி நிலம் தொடர்பாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது படம் அல்ல பாடம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில், திரைப்படம் குறித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று அவதூறு கருத்து கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பரப்பி வரும் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் எவ்வித பதிலும் தெரிவிக்காததால் முரசொலி அறக்கட்டளை சார்பில், அதன் உறுப்பினரும், திமுக எம்பியுமான ஆர்.எஸ் பாரதி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் மற்றும் சீனிவாசன் இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்த நிலையில், அவதூறு வழக்கில், வரும் மார்ச் 20-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ராமதாஸ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால், ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறிப்படத்தக்கது.