Advertisment

திமுகவில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... சீனியருக்கு அடித்த ஜாக்பாட்!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் வேட்பு மனுவை வாங்க மாவட்டம் தோறும், தேர்வுக் குழுவை, பா.ஜ.க. அமைக்கத் தயாராகி வருகிறது. இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி கூட இருக்கும் தி,மு.க. பொதுக் குழுவில் சில அதிரடி மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக சொல்கின்றனர். அதேபோல், கட்சியின் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை கருதி, அவர் பெயரில் வரும் அறிவிப்புகளுக்கு மாற்றுவழி பற்றியும் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

Advertisment

dmk

பொதுச் செயலாளருக்கு உதவியாக, பொறுப்பு பொதுச் செயலாளர் என்கிற பதவியை உருவாக்கலாம் அல்லது கட்சித் தலைவரே பொதுச் செயலாளரின் பணியையும் சேர்த்து கவனிக்கலாமா என்றும் ஆலோசனையும் நடந்து வருவதாக கூறுகின்றனர். இது பற்றி பொதுக்குழுவில் ஒரு முடிவு எட்டப்படலாம் என்று தெரிகிறது. பொறுப்புப் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சீனியர்களில் யாருக்கு கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடந்து வருவதாக கூறுகின்றனர்.

Meeting elections stalin leaders
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe