திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் - க.அன்பழகன் அறிவிப்பு

kalaignar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் 14.08.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

முன்னதாக தி.மு.க.பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை இன்று காலை மு.க ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஸ்டாலினுடன் தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் சென்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர்திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கலைஞர் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையில் கூடும் இந்தக் கூட்டத்தில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவது முக்கிய அம்சமாகும்.

Chief Executive Committee Emergency Meeting
இதையும் படியுங்கள்
Subscribe