நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளராக பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் சண்முகசுந்தரம் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன், அமமுக வேட்பாளர் முத்துக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சண்முகசுந்தரம் அதற்கான சான்றிதழை அதிகாரிகளிடம் பெற்றார்.