/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2709.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பேரூராட்சி தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வத்தலக்குண்டு பேரூராட்சி 18வது வார்டு கிராமம் மற்றும் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் பெரும்பாலான வாக்காளர்கள் விவசாய பணிக்கு காலையில் சென்று விடுகின்றனர். அவர்களை நேரடியாக சந்திப்பதில் வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு 18வது வார்டு திமுக வேட்பாளர் சிதம்பரம் விவசாய பகுதிகளுக்குச்சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கத்திட்டமிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_738.jpg)
அதன்படி ஒரு வாக்காளரின் வாழைத் தோப்புக்குச் சென்றவர், உரிமையுடன் ‘ஹோய்... மாப்பிள்ளை எங்க இருக்கீங்க’ எனத்தேடி, வாழைத் தோப்புக்குள் வலம் வந்து இறுதியாக வாழைக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வாக்காளர்களைச் சந்தித்து அவர்களிடம் தனக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பல்வேறு வகையில் உத்திகளைக் கையாண்டு வருவதால் பேரூராட்சி வார்டுகளில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)