DMK candidate Elangovan filed his nomination

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன்பின் வேட்பாளர் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் தனிப்பட்ட மனிதன் என்பதை விட மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் என்ற முறையில் வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அதுமட்டுமல்ல,திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடர்வதற்கும், ஈரோட்டிற்கு பல காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தமிழக முதல்வர் முனைப்போடு இருக்கிறார்.

மாவட்டத்தின் அமைச்சர் முத்துசாமி அவர்களோடு இணைந்து திருமகன் ஈரோட்டிற்கு செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு தயாரித்து வைத்துள்ளார். அதில் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ளவற்றைநிறைவேற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.