ADVERTISEMENT

‘’போராட்டத்தில் என் இடுப்பைக் கிள்ளினார்’’ - அனலாக கொதிக்கும் மகளிரணி துணைத்தலைவி 

07:50 PM Apr 06, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க சார்பாக கரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

அவர்களை கைது செய்த போலீஸார் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை அடைத்தனர். அதுவரை பிரச்னை இல்லை. ஆனால், அதன்பிறகு அந்த மண்டபத்தில் தனக்கு தி.மு.க மாணவரணியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது இடுப்பைக் கிள்ளி, தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தி.மு.க மாவட்ட மகளிரணி துணைத்தலைவி ஜெயமணி கிரிவாசன் எழுப்பிய குற்றச்சாட்டு அனலாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது.

தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபாகரன் மீது மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும், நகரச் செயலாளர் கனகராஜூம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லி, மண்டபத்துக்கு எதிரிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார். அதோடு, பிரபாகரன் மீது வெங்கமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பிறகு, பிரச்சனை பெரிதாவதை தடுக்க, அங்கே இருந்த ஜெயமணியின் கணவர் கிரிவாசனை அழைத்து நகரச் செயலாளர் கனகராஜ் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த முயன்றார். ஆனால், அதற்குள், தன்னைப் பிரபாகரன் ஆட்கள் தாக்கிவிட்டதாக கிரிவாசன் குற்றம் சாட்டினார். இதனால் பிரச்சனை நீண்டது.

இது குறித்து ஜெயமணி கிரிவாசனிடம் பேசினோம். அவர், ’’எங்களை கைது பண்ணி மண்டபத்துல வெச்சுருந்தாங்க. அப்ப பிரபாகரன் என் இடுப்பைக் கிள்ளினார். எனக்கு அதிர்ச்சியாயிட்டு. உடனே, இரண்டு ஆண்களை கடந்து அந்தப் பக்கம் போய் நின்னுகிட்டேன். அங்கே நின்ன நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கிட்ட புகார் சொன்னேன். ஆனா, பிரபாகரன் மீது அவங்க நடவடிக்கை எடுக்கலை. ரெண்டு பேரும் என் வளர்ச்சியைப் பிடிக்காம இப்படி பிரபாகரனை தூண்டிவிட்டிருக்காங்க. கரூர் தி.மு.கவுல பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. இந்த நிலை தொடர்ந்தால், நாங்கள் கட்சி மாறுவோம். தளபதி இதுல தலையிட்டு நடவடிக்கை எடுக்குற வரைக்கும் ஓயமாட்டேன்’’ என்றார் ஆக்ரோஷமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT