Advertisment

“அவல நிலையை திமுக அமைச்சரவை ஏற்படுத்தியுள்ளது” - ஆர்.பி. உதயகுமார்

publive-image

Advertisment

கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரிச்சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் நள்ளிரவில்கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது நீதிமன்றக் காவல் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திமுக சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தினுள் அமைச்சர் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்ததை அதிமுகவினர் குறிப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை குறித்து முதலமைச்சர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2016 ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் அவர்களது வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. ‘தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு - கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது மத்திய அரசு. இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது’என்று அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் 69வது பிறந்தநாளையொட்டி, மதுரை மாவட்டம், நடுவக்கோட்டை கிராமத்தில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசியஆர்.பி. உதயகுமார், “சுதந்திரம் அடைந்து தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு அமைச்சர் அறையில்பல மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை செய்த வரலாறு இதுவரை தமிழ்நாட்டில் கிடையாது. திமுக அமைச்சரவை இந்த அவல நிலையை உருவாக்கியது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு” என்றார். மேலும், “இரண்டு வருடத்தில் ஒன்பது மாத இடைவெளியில் இருமுறை மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளது” என்று பேசினார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe