Advertisment

ஆளும் கட்சியின் சதிகளை திமுக முறியடிக்கிறதா?

மழை விட்டும் தூவானம் விடலைங்கிற மாதிரி, மே 19-ல் 4 தொகுதிக்கான இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அணைத்து கட்சிகளும் பிஸியா இடைத்தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதி பிரச்சாரத்துக்குப் போன மு.க.ஸ்டாலின், அ.தி. மு.க.வுக்கு சாதகமான பகுதின்னு சொல்லப்படும் தருவைக்குளத்தில், வேனில் இருந்து பேசும் போது, கனிமொழியை அழைச்சிக்கிட்டு வரலையான்னு அங்கிருந்தவர்கள் குரல் கொடுத்திருக்காங்க. ஸ்டாலின் உடனே, நானும் என் தங்கை கனிமொழியும்தான் உங்களைத் தேடி வந்திருக்கோம்ன்னு சொல்லி, வேனுக்குள் இருந்த கனிமொழியை மேலே வந்து முகம் காட்டச் சொன்னார்.

Advertisment

dmk alliance

கனிமொழி போட்டியிட்ட தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் பகுதிங்கிறதால, அவரை மக்கள் எதிர்பார்த்துக் கேட்க கனிமொழியும் பிரச்சாரத்துக்கு வந்ததால் மக்கள் அந்த தொகுதி சம்மந்தமாக சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் நெருங்க நெருங்க அரசியல் கட்சினருக்கும் , மக்களுக்கும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சி மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் கூடுதல் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இருந்தாலும், மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் ஆளுந்தரப்புக்காக அதிகாரிகள் நுழைந்த விவகாரத்தால் பதற்றமும் கூடி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களில் நேரக் குளறுபடி இருப்பதாக அங்கே போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார். பல மையங்களிலும் இது மாதிரி பலவிதமான குளறுபடிகள். அதனால கடைசி நிமிடம் வரைக்கும் கண் கொத்திப் பாம்பா இருந்து, அதிகாரத் தரப்பின் சதிகளை முறியடிக்க வேண்டிய கவலையும் கடமையும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது என்று அரசியல் விமர்சகர்களும்,அரசியல் வட்டாரங்களும் தெரிவிக்கின்றனர்.

election campaign loksabha election2019 politics admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe