திமுகவின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 29- ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. இதில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

 DMK to become General Secretary that party president mk stalin

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளருடன், பொருளாளரும் தேர்வு செய்யப்படுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பதவியில் இருந்து விலகி பொதுச்செயலாளர் பதவி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரின் விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறேன். திமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளதால் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

 DMK to become General Secretary that party president mk stalin

பொதுக்குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேபோல் திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.