Advertisment

“அமைச்சரை தி.மு.க. கண்டிக்க வேண்டும்” - கே.எஸ். அழகிரி 

publive-image

Advertisment

புதுச்சேரியில் மாநில திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பேசினார். அப்போது ராஜகண்ணப்பன் பேசுகையில், "புதுச்சேரியில் திமுக வளர வேண்டும். திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நம்முடன் உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகவும் பழமையான கட்சியாக இருக்கிறது. தற்போது அந்த கட்சி பலத்தை இழந்து வருகிறது. காங்கிரஸை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

காங்கிரஸைப் பொறுத்த வரை சீட் பெறுவதற்காகத்தான் கட்சி நடத்துகிறார்கள். அதனால் என்ன பயன்? கடினமாக உழைக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இருப்பினும் இந்த 2 விஷயங்களை காங்கிரஸ் கட்சி செய்வதே இல்லை. ஆனால் தேர்தல் நெருங்கும்போது காங்கிரஸ் கட்சி வந்துவிடும். இது மக்கள் மத்தியில் வேலை செய்யாது'' என பேசினார்.

publive-image

Advertisment

இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி, “அமைச்சர் ராஜகண்ணப்பனின் செயல்பாட்டுக்கான பதிலை அவரது கட்சி தான் சொல்ல வேண்டும். எங்களது கட்சியில் யாரேனும் இவ்வாறு செய்திருந்தால் நாங்கள் பதில் சொல்லி இருப்போம். இது கட்சியின் விதிகளுக்கு முரண்பாடானது. இப்படி பேசியிருக்க கூடாது என்று அவருடைய கட்சி தான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

congress
இதையும் படியுங்கள்
Subscribe