நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கான பலத்தை எடப்பாடி பழனிசாமி அரசு பெற்றிருந்தாலும் அதனை உடைக்கும் முயற்சியில் இருக்கிறது திமுக. இதற்கு வசதியாக, சபாநாயகர் மீது கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாமா என்கிற யோசனையும் திமுகவில் விவாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks-eps 321_0.jpg)
இந்த மனமாற்றத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறதாம். அதாவது, சபாநாயகர் தனபாலும் திமுக தலைமையும் தற்போது நட்பு பாராட்டுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் சபாநாயகருக்கு எதிராக என்பதை தவிர்த்து முதல்வருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பதே திமுகவின் யோசனை என அறிவாலயத் தரப்பில் எதிரொலிக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் கடந்த சனிக்கிழமை உளவுத்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Follow Us