Advertisment

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு சிறுபான்மை மக்களை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது - ஜி.கே.வாசன்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைதேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி இராமலிங்க ராஜா ஆகியோரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் ஆம்பூரில் பிரச்சாரம் செய்தார்.

Advertisment

gk vasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, “இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்ற உறுதியை பாஜக அரசு கொடுத்துள்ளது. ஒத்த கருத்துடைய அரசாகவும் தமிழகத்தில் இயங்கி வரும் அதிமுக அரசு மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டும், உணர்ந்தும் அதற்கேற்றவாறு ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கும் திட்டங்களை கொடுத்து கிராமம் முதல் நகரம் வரை மக்களின் வாழ்வாதரத்தை உயர்திக்கொண்டிருக்கும் அரசாக அதிமுக அரசு இயங்கி கொண்டிருக்கிறது.

Advertisment

பாஜக, அதிமுக அதனுடைய கூட்டணி காட்சிகள் எல்லாம் ஒரே நிலையில் உறுதியாக இருக்கிறோம். சிறுபான்மை மக்களை பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் பாதுகாப்பிற்கும் உறுதியோடு செயல்படும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு சிறுபான்மை மக்களை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. சிறுபான்மை மக்களை ஏமாற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் 9 நாடாளுமன்ற தொகுதிகளை பெற்றுகொண்டு ஒரு சிறுபான்மையினரை கூட போட தகுதியற்றவர்களாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் - திமுக வலையில் விழவேண்டாம் என்று சிறுபாண்மை மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

congress loksabha election2019 gk vasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe