நடப்பு சட்டப்பேரவையில் மரணமடைந்த எம்.எல்.ஏக்களின் விவரம்!

admk

தமிழ்நாட்டின் 15ஆவது சட்டப்பேரவையில் அ.தி.மு.க. தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது ஜெயலலிதா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மரணத்திற்கு ஓ.பி.எஸ். முதல்வராகப் பொறுப்பேற்று கொண்டார். அதன் பின்பு ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தம் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்று தற்போது வரை ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜெ.அன்பழகன் மறைவால் தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 98 லிருந்து 97- ஆகக் குறைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கடந்த ஓராண்டில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும் கட்சித் தலைவருமான கலைஞர்.கருணாநிதி, விக்கிரவாண்டி- ராதாமணி, குடியாத்தம்- காத்தவராயன், திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஜெ.அன்பழகன் ஆகிய எம்.எல்.ஏக்கள் காலமாகியுள்ளனர். அ.தி.மு.கவில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எம். சீனிவேல், அதன் பின்பு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா (ஆர்.கே நகர் தொகுதி), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம் தொகுதி), ஆர்.கனகராஜ் (சூலூர் தொகுதி) ஆகியோர் மரணம் அடைந்துள்ளனர்.

admk assembly MLA politics
இதையும் படியுங்கள்
Subscribe