style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
திமுக பொதுச் செயலாளராக இருந்த பேரசிரியர் க.அன்பழகன் கடந்த மார்ச் 7ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பெரும் இழப்பாகவே அமைந்தது. ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பேராசிரியரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக சட்டமன்றம் இரண்டுநாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. தொடந்து திமுக சார்பில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இன்று (14.03.2020), சென்னையில் பேராசிரியரின் உருவபடத் திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாலர் துரைமுருகன், திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பேராசிரியரின் குடும்ப உறுப்பினர்களும், திமுக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.