ADVERTISEMENT

கூட்டணி ஒண்ணுதான்! ஆனா நீங்க வேற, நாங்க வேற! அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்!

06:25 PM Dec 26, 2019 | Anonymous (not verified)

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 6 மாவட்ட வார்டுகளுக்கும் 5 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும் சீட் பங்கிடுவதற்கான பேச்சுவார்த்தையின்போதே தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் முட்டிக்கொண்டது. காங்கிரசுக் கும் காங்கிரசுக்குமே முட்டிக்கொண்டது, தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்குமே முட்டிக் கொண்டது. என்ன ஒரே குழப்பமா இருக்கா? தெளிவாகவே சொல்லிடுறோம்.

ADVERTISEMENT



"வாங்க உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம்' என குமரி மேற்கு தி.மு.க. மா.செ. மனோ தங்கராஜ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. விஜயதரணி, கம்யூ. மா.செ. செல்லச்சாமி ஆகியோர் ஒன்றுகூடினார்கள். மாவட்ட பஞ்சாயத்து 1-ஆவது வார்டுக்கு தனது ஆளான அம்பிளியை முன்னிறுத்தினார் விஜயதாரணி. அதெல்லாம் முடியாது லீமா ரோசுக்குத்தான் அந்த வார்டு' என மனோதங்கராஜும் செல்லச்சாமியும் சொல்ல, சட்டென எழுந்து போய்விட்டார் விஜயதரணி.

ADVERTISEMENT


வெளியே போனதும் ராஜேஷ்குமாருக்கு போன்பண்ணி "லீமா ரோஸ் நின்னா, கண்டிப்பா நான் அம்பிளியை நிறுத்துவேன்' என ஆவேசமானார் விஜயதரணி. இதேபோல் 6-ஆவது வார்டை தனது ஆளான ஜோபிக்கு ராஜேஷ் குமார் கேட்க, "அதெல்லாம் முடியாது எங்க கட்சி லீலாவுக்கு'த்தான் என்றார் மனோதங்கராஜ். "அப்படின்னா நான் ஜோபியை நிறுத்துவேன்' என்றார் ராஜேஷ்குமார். இதேபோல்தான் திருவட்டார் ஒன்றிய 10-வது வார்டை ஒதுக்குவதில் மேற்கு மா.செ. மனோதங்கராஜுக்கும் கிழக்கு மா.செ.சுரேஷ் ராஜன் கோஷ்டிக்கும் இடையே முட்டிக் கொண்டது. கடைசி வரைக்கும் பிரச்சினை தீராததால், அவரவர் சொன்னபடியே அவரவர் ஆட்களை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து, பிரச்சாரத்தையும் முடித்துவிட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT