Skip to main content

6வது முறையாக ஆட்சியமைக்கும் தி.மு.க.!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

tn assembly election wins dmk aliance parties

 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதில் திமுக கூட்டணி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட அதிக இடங்களைக் கைப்பற்றிய நிலையில், தனிப்பெருமைப்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தமிழகத்தில் திமுக 6வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. 

 

6வது முறையாக ஆட்சி அமைக்கும் தி.மு.க.!

 

1957ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நுழைந்தது. 1967ஆம் ஆண்டு 137 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. பின்னர், 1971ஆம் ஆண்டு 184 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சியதிகாரத்தைப் பறிகொடுத்தது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 150 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. பின்பு, திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 2 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே வென்றது.

 

அதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 176 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி வென்றது திமுக. 2001ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுக, 2006ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. 2006ஆம் ஆண்டு திமுக கூட்டணி 163 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், திமுக 96 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே பெற்றது. 2006ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் ஆதரவுடன் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது. 

 

கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக ஆட்சியதிகாரத்தைப் பெற இயலாமல் போனது. 2021ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வல்லமையைப் பெற்றுள்ளது திமுக

 

 

சார்ந்த செய்திகள்