நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வென்றது.
இதைத்தொடர்ந்து வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நாளையும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றத்திலுள்ள சபாநாயகர் அறையில் நடைபெறவுள்ளது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கும் நிகவின்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கும்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளும் உடனிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.