நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்ற திமுக, அதிமுக எம்.எல்.ஏ. க்களின் பதவியேற்பு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

dmk admk

மொத்தம் 22 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 13 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் வென்றது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வரும் 29-ம் தேதி பதவியேற்பு விழா நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் அறையில் நடக்கவுள்ளது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

Advertisment

13 திமுக எம்.எல்.ஏ.க்களும் நாளை சபாநாயகர் அறையில் பதவியேற்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.