ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கான மசோதாவை இந்த மாத துவக்கத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது.

Advertisment

14 party MPs

அத்துடன் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.

இதில், திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் போராட்டத்தில் பங்கேற்றார்.

Advertisment