சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள் முன்னினையில் இன்று (24.06.2019) மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை.