Published on 04/02/2022 | Edited on 04/02/2022

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 3 வார்டுகளில் போட்டியிட உள்ள தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் வந்திருந்தனர். காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் சாலையை மறித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாட்டு வண்டியை உள்ளே அனுமதித்தனர்.