DMDK Vijayakanth election campaign at trichy

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், இன்னும் இரு தினங்களில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது.அதனையொட்டி தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்களும், சிறப்பு பேச்சாளர்களும் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் அமமுகவின் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்தும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மனோகரனை ஆதரித்தும், திருவரம்பூர் தேமுதிக வேட்பாளர் செந்தில் குமாரை ஆதரித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisment

அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர், வாக்காளர்களிடம் எதுவும் பேசாமல் கையசைத்து மௌனமாக முரசு சின்னத்தை அசைத்துக் காட்டி வாக்குசேகரித்தார்.