stage

Advertisment

இன்று அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இன்னும் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்காத நிலையில் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டது. தேமுதிக தலைமை அலுவலத்தில் நிர்வாகிகள் கூட்டம் நிறைவுபெற்றும், இன்னும் கூட்டணி குறித்து முழுமையாக அறிவிக்கவில்லை என்பதும், இன்று காலை வெளியான பத்திரிகை விளம்பரத்தில் விஜயகாந்த் படம் இல்லை என செய்திகளில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனின் புகைப்படமும் இடம்பெற்றது. தற்போது இந்த படங்கள் அகற்றப்பட்டுள்ளன.