Skip to main content

"அவர் பேசுனதை சொன்னா அசிங்கமாயிடும்..." - துரைமுருகன் சந்திப்பு குறித்து சுதீஷ்  

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்ததாகவும் அப்போது கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தேமுதிகவுக்கு கொடுக்க இனி சீட்டுகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். ஒரு பக்கம் அதிமுகவுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடந்துவரும் வேளையில், இன்னொரு புறம் திமுகவுடன் நடந்த இந்த சந்திப்பு குழப்பத்தையும் கேள்விகளையும் ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தில் விமரசிக்கப்பட்ட இந்த சந்திப்பு குறித்து விளக்கமளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் தேமுதிக துணைப் பொது செயலாளர் சுதீஷ்.

 

DMDK"எங்கள் மாவட்ட செயலாளர் அனகை முருகேசனும் இளங்கோவனும் தங்கள் சொந்த வேலையாக திமுக பொருளாளர் அண்ணன் துரைமுருகனை சந்தித்தனர். ஆனால், பத்திரிகைகள் கூட்டணி விஷயமாக சந்தித்ததாக செய்தி வெளியிட்டிருக்கின்றன. உண்மை அதுவல்ல என்று விளக்கவே இந்த ப்ரெஸ் மீட்" என்று சுதீஷ் கூற, செய்தியாளர்கள், "நீங்கள் துரைமுருகனை சந்தித்தாகக் கூறினாரே?" என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, "நானும் துரைமுருகனும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவரும் நானும் சந்திப்பது இன்று நேற்று நடப்பதல்ல. அடிக்கடி நாங்கள் சந்திப்போம். ஆனால், இப்போது நாங்கள் சந்திக்கவில்லை. கடந்த வாரத்தில் கூட்டணி குறித்து பேசினோம். ஆனால், இப்போது நான் அவரை சந்திக்கவில்லை. அப்படி சந்தித்தாலும் கட்சி, அரசியல் நாகரிகம் கருதி நாங்கள் சந்திப்பின் போது நடந்ததை வெளியே கூற மாட்டோம். நாங்கள் கேப்டன் வழி வந்தவர்கள். ஆனால், துரைமுருகன் வந்த வழி வேறு. எங்கள் சந்திப்புகளின் போது அவர்கள் கட்சித் தலைமை குறித்து அவர் பேசியதையெல்லாம் இங்கே சொன்னால் அசிங்கமாகிவிடும்" என்று கோபமாகப் பேசினார்.

கேள்விகள் அதிகரிக்க அதிகரிக்க சற்று டென்ஸனான சுதீஷ், செய்தியாளர் சந்திப்பை மிகச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'முதல்வர் பதவி விலக வேண்டும்' - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
AIADMK announced the protest 'cheif minister must resign'

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AIADMK announced the protest 'cheif minister must resign'

''இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இந்தநிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி வருவாய் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

Next Story

தேர்தலில் வெற்றி; கோ பூஜை செய்து வழிபட்ட கதிர் ஆனந்த் எம்.பி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Kathir Anand MP, who worshipped God Pooja after winning the election

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்பி கதிர் ஆனந்த் 2,15,702 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 103364 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வாணியம்பாடி நகரப் பகுதிகளில் நன்றி தெரிவிக்க வந்திருந்த எம்பி கதிர் ஆனந்த் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் உள்ள அழகு பெருமாள் ஆலயத்தில் கோ பூஜை செய்து வழிபாடு நடத்தி பின்னர் அருகில் இருந்த தர்காவிற்கும் சென்று பிரார்த்தனை செய்தார். 

Kathir Anand MP, who worshipped God Pooja after winning the election

பின்னர் பேசிய கதிர் ஆனந்த், வேலூர் பாராளுமன்ற தொகுதி சுதந்திரம் பெற்ற நாள் முதலாய் இதுவரை யாரும் வெற்றி பெறாத வகையில் அதிகபட்ச வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெற செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக வாணியம்பாடி மக்கள் அதிகப்படியான வாக்குகளை அள்ளித் தந்து என்னை வெற்றி பெற செய்துள்ளனர். என்னை இனி காட்பாடி கதிர ஆனந்த் என்று அழைக்காமல் வாணியம்பாடி கதிர் ஆனந்த் என்றே அழைக்கலாம் அந்த அளவுக்கு வாணியம்பாடி மக்களுக்கு என் மீது உரிமை உள்ளது எனவும், எனது அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் எனவும் பொது மக்களிடையே திறந்தவெளியில் நின்று நன்றி தெரிவித்தார்.

பின்னர் வாணியம்பாடி பேருந்து நிலையம், கோனாமேடு, பெருமாள் பேட்டை, நியூடவுன், உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.