தேமுதிக-வுக்கு ஒரு எம்பி பதவி... அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கும் போதே... - பிரேமலதா விஜயகாந்த்

இந்தியாவில் 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன்முடிவடைகிறது. திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

dmdk premalatha vijayakanth press meet

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தொடர்ந்து அதிமுகவிடம் கேட்டு வருகிறோம். இது குறித்து அ.தி.மு.க., தலைமை மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது. அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டு மக்களுக்கு நல்லது என்றால் நாங்கள் வரவேற்போம். அதுவே இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்றால், தே.மு.தி.க முதல் ஆளாக களத்தில் இறங்கும்" என தெரிவித்துள்ளார்.

admk dmdk premalatha vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe