Advertisment

இனிமேல் இப்படி பேச வேண்டாம்... வெறும் அம்பு மட்டும் தான்... ரஜினி பற்றி தேமுதிகவின் பிரேமலதா அதிரடி பேச்சு!

சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார். இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் அவுட்லுக் என்ற பத்திரிகையின் ஆதாரங்களை காண்பித்து தான் கூறியது சரிதான் என்றும் கூறினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.

Advertisment

dmdk

Advertisment

இந்த நிலையில் திருவள்ளூர் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அளித்த பேட்டியில் பெரியார் யாரென இந்த உலகத்திற்கு நன்கு தெரியும். நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பற்றி தற்போது பேசி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பெரியார் பற்றி பேசியதை ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து என்று கூறினார். பெரியார் பெண்களுக்காக புரட்சிகரமாக பல கருத்துகளை கூறி சரித்திரம் படைத்துள்ளார். அவரைப்பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. துக்ளக் விழாவிற்கு சென்ற ரஜினிகாந்த் அந்த பத்திரிகையை பற்றி பேசியிருக்க வேண்டும். பெரியார் பற்றி பேசி இருப்பதை தவிர்த்து இருக்கலாம். யாரோ அவரை தவறாக வழி நடத்துகிறார்கள் என நினைக்கிறேன். அவர் வெறும் அம்பு மட்டும் தான் என்று நினைக்கிறேன் இதுபோன்ற பேச்சுகளை இனிமேல் அவர் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

dmdk politics Premalatha rajinikanth Speech
இதையும் படியுங்கள்
Subscribe