தேமுதிக அதல பாதாளம் செல்லகூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது எனவும், இதற்கு காரணம் ரேமலதாவும், சுதீஷும் எனவும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.

Advertisment

Krishnapriya

சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் இவரும் பெங்களூரு சிறையில் உள்ளார். இளவரசின் மகள் கிருஷ்ணப்ரியா. இவர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் செயல்பாடுகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ''2006 முதல் தே.மு.தி.க , திரு விஜயகாந்த் அவர்களால், அடைந்த உயரத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, அதல பாதாளம் செல்லகூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைக்கு அக்கட்சியை தள்ளியதில் சம பங்கு வகிக்கிறார்கள் திருமதி பிரேமலதாவும் , திரு சுதீஷும்''. என குறிப்பிட்டுள்ளார்.