Advertisment

தேமுதிகவினர் எழுப்பிய கேள்வி...உற்சாகப்படுத்திய பிரேமலதா!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழகம் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் பதினைந்தாம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியிருந்தனர். இந்த நிலையில், திருப்பூரில் நடக்க இருக்கும் தே.மு.தி.க.வின் முப்பெரும் விழாவில் விஜயகாந்த்தின் உரையை எதிர்பார்த்து தொண்டர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். தேமுதிக தலைமையிடம் விஜயகாந்த் அந்த விழாவில் உரை நிகழ்த்துவாரா என்ற இதே கேள்விதான் தே.மு.தி.க. தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் இருப்பதாக கூறுகின்றனர்.

Advertisment

dmdk

தேமுதிக தொடங்கப்பட்டு 15 ஆம் ஆண்டு விழாவை, வழக்கம் போல் முப்பெரும் விழாவாக திருப்பூர் வேலவன் ஓட்டல் வளாகத்தில் கொண்டாட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக ஈரோடு , திருப்பூர், கோவை மாவட்ட கட்சிப் பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தினார் தேமுதிகவின் பொருளாளரான பிரேமலதா. அப்போது, அந்த விழாவில் கேப்டன் உரை நிகழ்த்துவாரா என்று அவர்கள் பிரேமலதாவிடம் கவலையோடு கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிரேமலதா, தற்போது கேப்டனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பேசுவதற்கும், நடப்பதற்கும் மட்டும் கொஞ்சம் பிரச்சினை இருப்பதாக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். அதை சரி செய்வதற்கு அவருக்கு சில பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். அதனால் திருப்பூர் முப்பெரும் விழாவில் கேப்டனின் உரையை நீங்க கேட்க வாய்ப்பிருக்கும் என்று கூறி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளார்.

thirupur birthday Premalatha vijayakanth dmdk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe