தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரதான கட்சிகளின் சார்பில் கூட்டணி, தொகுதி, வேட்பாளர்கள் குறித்த பேச்சுவார்த்தை அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக - தேமுதிக இடையே தொகுதி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது.அதில் தேமுதிகவுக்கு உடன்பாடு எட்டப்படவில்லை.பின்னர் இன்று (09.03.2021) மாவட்டச் செயலாளர்கள் உடனான அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் அதிமுக உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது. இதனை வரவேற்கும் விதமாக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, பட்டாசு வெடித்து கொண்டாடிய கட்சியினர்...! (படங்கள்)
Advertisment