2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல், வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரதானக் கட்சிகளின் சார்பில், அனைத்துத் தொகுதிகளின் வேட்பாளர்களும்தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், இன்று எழும்பூர், விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர்கள் பிரபு மற்று சேகர் ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.