இன்று (05.07.2021) தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
அதேபோல் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும், தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த், சைக்கிள் ஓட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தார். இதில் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.