Advertisment

அதிமுகவிற்கு தேமுதிக கொடுத்த ட்விஸ்ட்...கூட்டணியே வேணாம்... தேமுதிகவுக்கு இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி!  

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

admk

இந்த நிலையில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் 50 சதவீத இடங்களைக் கூட கேட்போம்' என தேமுதிக தலைவர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் கூறியது அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு விஜயகாந்தின் பிரசாரம் தான் காரணம் என்றும் தேமுதிகவினர் கூறிவந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் கூட வாங்கவில்லை. அதோடு 3 சதவிகித வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளே பெற்றனர். இப்படி இருக்கும் போது இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் கேட்கும் சீட்டை பார்த்து அதிமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கான ரியாக்‌ஷன் தான் தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மூலம் வெளிப்பட்டுள்ளது. சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பாக கால்நடைகளுக்கான நடமாடும் அவசர ஊர்தியை அமைச்சர் பாஸ்கரன் துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், 'விஜயகாந்த் அரசியலுக்கு வந்து என்ன சாதித்தார்? நடிகர்களெல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள். உங்களுக்குத் தெரியாதது இல்லை. விஜயகாந்த் கூட கட்சி ஆரம்பித்தார். என்ன சாதித்தார்? அப்டி. இப்டி ஆயிருச்சு. இனிவரும் காலங்களில் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அதெல்லாம் சரியா வராது' எனக் கூறினார். கூட்டணி கட்சியில் இருக்கும் தேமுதிகவை அமைச்சரே இப்படி கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் எடப்பாடிக்கு தெரியாமல் அமைச்சர் ஒருவர் கூட்டணி கட்சி தலைவரை இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர். அதோடு உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியை கொடுக்க கூடாது என்ற முடிவிலும் அதிமுக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணியில் புதிய குழப்பம் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

politics vijayakanth eps dmdk admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe