DMDK in the first place; Party members are happy

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தேமுதிகவிற்கு முதல் இடத்தில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆனந்துக்கு எண் 1 கிடைத்துள்ளது. அதுவே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. முதல் வெற்றி. கண்டிப்பாக தேமுதிகவிற்கு திருப்பு முனையாக இந்த இடைத்தேர்தல் அமையும்” என்று கூறினார்.