Advertisment

தேமுதிகவின் முடிவு - வானதி ஸ்ரீநிவாசன் வருத்தம்! 

dmdk  decision - Vanathi Srinivasan sad!

சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2021) காலை 11மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகதேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது நாளை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

Advertisment

இந்தக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த தேமுதிக கட்சி துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ''கேட்டதொகுதிகளும், எண்ணிக்கையும் தராததால் நாங்கள் அதிமுக - பாஜககூட்டணியில் இருந்து விலகுகிறோம். தேமுதிகவிற்கு இன்றுதான் தீபாவளி. கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அதிமுக தமிழகத்தில் டெபாசிட் இழப்பார்கள். முக்கியமாக அங்குஇருக்கின்ற கே.பி.முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சியுடையஸ்லீப்பர்செல். அவர் அதிமுகவிற்கு செயல்படவில்லை'' என்றார்.

Advertisment

இந்நிலையில் தேமுதிக கூட்டணியை விட்டு விலகியது வருத்தமளிக்கிறது என பாஜகவைச் சேர்ந்த வானதிஸ்ரீநிவாசன்தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுகுறித்து கூறியுள்ளதாவது, ''அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏதாவதுஒரு வகையில் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வேண்டும்.தேமுதிக, அதிமுக - பாஜககூட்டணியை விட்டு விலகியது வருத்தமளிக்கிறது'' எனக் கூறியுள்ளார்.

dmdk Vanathi Srinivasan vijaykanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe