தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது. ஒருபுறம் இவர்களின் பிரச்சாரங்கள் நடந்துவர மறுபுறம் இந்த கட்சிகளுடன் மற்றக் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (30.01.2021) சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்தில் தே.மு.தி.க. அனைத்து தொகுதி பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், கூட்டணி, தேர்தல் பணிகள், தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கான தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.