தனித்து போட்டியிடும் தேமுதிக...? 

dmdk competing alone ...?

சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (09.03.2021) காலை 11மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகதேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த முடிவால், வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது விரைவில் தெரியவரும் எனக் கூறப்பட்ட நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில்தற்போது தேமுதிக தனியாக தேர்தலில் களம்காண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அமமுக உடன் திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், மறுபுறம்தனித்து நிற்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகநேற்று தகவல் வெளியாகியிருந்தது.அமமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பழனியப்பன், மாணிக்க ராஜா ஆகியோருடன் தேமுதிகவைச் சேர்ந்த பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகியோர் பேசியதாக கூறப்பட்டநிலையில், அங்கும்சரியான இடம் கிடைக்காததால்தற்போது தனித்து களம்காணும்முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் வாசிக்க...பாமக தொகுதிகளை தேமுதிக வேட்டையாடிவிடும்... - பொங்கலூர் மணிகண்டன் அதிரடி

dmdk tn assembly election 2021 vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe