Advertisment

தேமுதிகவை விடாப்பிடியாக கூட்டணிக்குள் சேர்த்த பாஜக!!! ஆனால் இப்போது???

தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்த்ததில் அதிமுக பங்கு இருக்கிறதோ பாஜகவின் பங்கு மிகமிக அதிகமாக இருக்கிறது. எத்தனை கட்ட பேச்சுவார்த்தைகள், எத்தனை நாள் போராட்டம் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைவதற்கு பாஜக செய்த முயற்சிகள்தான் எத்தனை, எத்தனை? தேமுதிக மீது நல்ல அபிமானம் கொண்டிருந்த பாஜக அவர்களுக்கு ஒரு ராஜ்ய சபா எம்.பி. கொடுக்கவும் நினைத்திருந்தது.

Advertisment

vijayakanth modi

ஒருகட்டத்தில் தேமுதிக ஒரேநேரத்தில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து அரசியல் களத்தில் குண்டு வைத்தார். இது மிகுந்த சர்ச்சையானது. பாஜகவிற்கு தேமுதிக மீது ஏற்பட்ட முதல் அதிருப்தி அதுதான். அதன்பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது அவர்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

Advertisment

ஆனால் தேமுதிக தலைவர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படவில்லை. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலமின்றி இருந்ததால் அவராலும் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இவையெல்லாம் பாஜகவை அதிருப்தியடைய செய்தது. கூட்டணிக்குள் வருவதற்கு அவர்கள் விதித்த விதிகள், கேட்ட தொகுதிகள் என அனைத்துமே அதிகமாக இருந்தது என அதிமுகவினர் புலம்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு எதிராகவே வந்தது. இதனால் மிகவும் அதிருப்தியானது பாஜக. இந்நிலையில்தான் தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது, அதற்கு பாஜக ராஜ்ய சபா சீட்டெல்லாம் தரமுடியாது என்றும் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் பார்க்கலாம் என்றும் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

admk dmdk elections Narendra Modi vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe