Advertisment

ஆதரவாளர்களுடன் திவாகரன் நாளை அவசர ஆலோசனை 

di

சசிகலாவின் தம்பியும் அம்மா அணி தலைமை ஒருங்கிணைப்பாளருமான திவாகரன் மன்னார்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை திங்கள் கிழமை காலை தனது ஆதரவாளர்களுடன் அவரச ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

கடந்த 7 ந் தேதியிட்ட 14 பக்கங்கள் கொண்ட வக்கீல் நோட்டிசை சசிகலா வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவியது.

Advertisment

அந்ந நோட்டீசில் சசிகலாவுக்கு துரோகம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பி எஸ் ஆகியோருடன் நெருக்கம் காட்டி வருவதாலும் கட்சி உறுப்பினரே இல்லாத நீங்கள் சசிகலா பெயரை, படங்களை பயன்படுத்துவதாகவும் இனிமேல் படங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தினகரனை பற்றி பேசக்கூடாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நோட்டிஸ் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று திவாகரன் தரப்பினர் கூறிவந்தனர்.

இந்த நிலையில் கடந்த 12 நாட்களாக சென்னையில் இருந்த திவாகரன் திங்கள் கிழமை மன்னார்குடி திரும்புகிறார். தொடர்ந்து தனது அம்மா அணி கட்சி அலுவலகத்தில் தனது அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலா பெயரில் அனுப்பிய நோட்டிஸ் சசிகலா பார்வைக்கு போனதா? இனிமேல் கட்சி பதாகையில் சசிகலா படத்தை வைப்பதா வேண்டாமா? தொடர்ந்து பிரச்சனைகள் செய்து வரும் தினகரனுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது பற்றியெல்லாம் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறுகின்றனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பும் உள்ளதால் நாளை பரபரப்பு தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thinakaran sasikala diwakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe