Advertisment

மாவட்டச் செயலாளர் விடுவிப்பு... பா.ம.க. தலைமை அறிவிப்பு!

pmk

Advertisment

பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் கலைமணி கட்சியின்அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜி.கே.மணி வெளியிடுட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராகப் பணியாற்றி வரும் ஆரணி வட்டம் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி இன்று (11.07.2020) சனிக்கிழமை முதல் அப்பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

புதிய மாவட்டச் செயலாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் டாக்டர் ராமதாஸ், பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

District Secretary anbumani Ramadoss gk mani pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe