Disrespect to Anna's statue

விழுப்புரத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது அங்குபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுச்சேரி விழுப்புரம் சலையில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் அண்ணா சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணாவின் சிலைக்கு ஆ.ராசாவின் புகைப்படத்தை மாட்டி, புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, சிலையின் முகத்தை திமுக கொடி கொண்டு மூடியுள்ளனர்.

Advertisment

தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள் அண்ணாவின் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த காலணி மற்றும் ஆ.ராசாவின் புகைப்படத்தை அகற்றி விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.