ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோர் உரிமை மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றுப்பேசினார். அப்போது அவர்,
’’ஒக்கி புயலில் சிக்கி எத்தனை பேர் இறந்தனர் என தமிழக அரசு உரிய விளக்கம் தரவில்லை. புயல் முன் கூட்டியே அறிவிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் உயிர் சேதம் அதிகரித்துள்ளது. உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் உயிர் சேதம் குறைந்திருக்கும்.
காணாமல் போன மீனவர்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகே இறந்ததாக கருதப்படுவர் என்ற சட்டத்தை மாற்ற வேண்டும். சட்டத்தை ஓராண்டாக குறைத்து பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.