Advertisment

நாங்களும் மனுஷன்தான், ரொம்ப கஷ்டப்படுறோம்... இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ட்வீட்!

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் பல துறைகளின் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisment

director

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் பண்பாட்டு மையம் ட்விட்டர் பக்கத்தில் தூய்மை பணியாளர்களின் சேவை குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர். அதில், "எங்கள் வலியை உணராதவர்கள் மனிதர்கள் அல்ல... ஆயிரம் கொரோனவை தினம் தினம் சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்." ஏனென்றால்,நாங்கள் தான்... #தூய்மை_மனிதர்கள், #தூய்மை_பணியாளர்கள் என்றும், நாங்களும் மனுஷன் தான், நெஞ்செல்லாம் வலிக்குது ரொம்பகஷ்ட்டப்படுறோம்" என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

coronavirus director pa.ranjith politics twitter
இதையும் படியுங்கள்
Subscribe