Advertisment

"நீதான வக்கீலுக்குப் படிக்கிற...?" இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ட்வீட்!  

pa.ranjith

Advertisment

சமீபத்தில் சேலத்தில் விஷ்ணுப்பிரியன் என்ற இளைஞரும், நாமக்கல்லில் தலித் சசிகுமார் என்ற இளைஞரும் சில நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் பண்பாட்டு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் சேலத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர். அதில், "சேலம்‌ தலித் இளைஞர் விஷ்ணுப்பிரியன் படுகொலை. உடன் பிறந்த தம்பியும் கவலைக்கிடம். சாதியத் தீண்டாமை வெறியாட்டத்தை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கின்றது. சாதி வெறியர்கள் 10 பேரைமட்டுமே கைது செய்துள்ளது காவல்துறை. அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்.தமிழகத்தில் தலித் மக்களுக்குத் தொடர்ச்சியாக நிகழும் அநீதிகளைத் தமிழக அரசுஏன் கண்டுகொள்ளவில்லை? தமிழக அரசுஇந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமா? ஒருவேளை தமிழகத்தில் தமிழக அரசு உள்ளது என்பது கற்பனைதானா?" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

அதேபோல், "நாமக்கல்‌ வகுரம்பட்டியில் தலித்‌‌ சசிகுமாரை நீதானா வக்கீல் படிக்கிற என்றும் பெரியார் அம்பேத்கர்கருத்துகளைப் போற்றி பதிவு போடுறது நீதான" எனத் தாக்கியுள்ளனர். இந்தச் சாதியத் தீண்டாமையை நீலம் பண்பாட்டு மையம் கண்டிக்கின்றது. 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய் என்றும், நாங்கள் தலைவர்களைப் பேசுகிறோம், தலைவர்களைப் பற்றி பதிவு செய்கிறோம் ஆனால் எங்களுக்குப் பாதுகாப்பும், சுயமரியாதையும்கிடைப்பது இல்லையே ஏன்?இந்தத் தமிழ்ச் சமூகம் இதற்குப் பதில் சொல்லுமா?நான் வழக்கறிஞர் ஆகியும் சமத்துவம் என்பது கற்பனை தானா என்று கேள்வி என்னுள் தோன்றுகிறது."என்றும் பதிவிட்டுள்ளனர்.

incident Salem pa.ranjith director
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe