Skip to main content

கமலும் இந்து தீவிரவாதிதான் - கவுதமன்

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

 

கமலும் இந்து தீவிரவாதிதான் என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.

 

director Gowthaman - kamal haasan


 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார். கமலின் இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, ‘‘ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது’’ என்று கூறியிருந்தார்.


 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கவுதமன், கமலை தலைவராக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே கமல் கருத்துக்கு நரேந்திர மோடி பதில் கூறியிருக்கிறார். விவசாயிகள் போராட்டத்தை மறைக்கவே கோட்சேவை இந்து தீவிரவாதி என கமல் கூறினார். கோட்சேவை இந்து தீவிரவாதி என கமல் கூறியது பிக்பாஸை போலவே அதுவும் ஒரு நாடகம்தான். இவ்வாறு கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித பட இயக்குநர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
pa.ranjith movie j.baby director suresh maari emotional at press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய நாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.