Advertisment

“அதிமுக, திமுகவை எதிர்த்து நேரடி போட்டி..” - மநீம பொதுச்செயலாளர்

Direct competition against AIADMK DMK says MNM General Secretary

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் முருகானந்தம் இன்று (13.03.2021) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், திருச்சி சட்டமன்றத் தொகுதிகளில் மிக முக்கியமாக உள்ள முசிறி, துறையூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

Advertisment

மேலும், “அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக போட்டியிடும் இந்தத் தொகுதிகளில் நாங்கள் நிச்சயம் வெல்வோம். திமுக 20 ஆண்டு காலமும், அதிமுக 25 ஆண்டு காலமும் ஆட்சி செய்த இப்பகுதியில், நிறைவேற்றப்படாமல் இருக்கக் கூடிய பல செயல்திட்டங்களை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

Advertisment

நாங்களும் சாமானிய மக்களைப் போன்றவர்கள்தான். எனவே, இந்த திராவிடக் கட்சிகள் செய்யாத பணிகளை நாங்கள் பொதுமக்களிடம் எங்களுடைய தேர்தல் பரப்புரையில் முன்னெடுத்துச் செல்வோம். நிச்சயம் விழுப்புரம் சட்டமன்றத்திற்கு மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் அமர்வார்கள்” என்று தெரிவித்தார்.

MNM trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe