Advertisment

'இன்னும் 10 அமாவாசைக்குள் பாருங்க'-திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

nn

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுகவின் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விரைவில் விசிக தலைமையில் திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுகவிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Advertisment

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரி திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், ''மது ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் திருமாவளவன் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். எனவே விரைவிலேயே அவர் தலைமையில் திமுகவில் இருக்கும் அத்தனை கூட்டணிக் கட்சிகளும் அடுத்து ஆளுகின்ற கட்சியாக வருகின்ற எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு நிச்சயம் வருவார்கள்.

Advertisment

வைகோ இருக்கிற இடம் தெரியாமல் கிடக்கிறார். மகனுக்கு ஒரு எம்பி பதவி வாங்கிக்கொண்டு அவருக்கும் ஒரு எம்பி வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கிறார். முஸ்லிம் லீக் சொல்லவே வேண்டியது இல்லை. விலைவாசி உயர்வை உணர்த்த வேண்டிய கம்யூனிஸ்ட் வெளியே வருவதே இல்லை. இவர்கள் கூட்டணி அங்கு நிச்சியமாக நிலைக்காது. எல்லாரும் அடுத்த தேர்தலுக்குள்ளாக, 10 அமாவாசைக்குள் இந்த கூட்டணிக்கு மாறி எடப்பாடி தலைமையில் நிச்சயமாக வருவார்கள்'' என்றார்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe