Advertisment

மீண்டும் பொருளாளர் பதவியை கைப்பற்றிய திண்டுக்கல் சீனிவாசன்!

 Dindigul Srinivasan has won the post of treasurer again!

பல்வேறு தடைகள், எதிர்ப்புகள், அரசியல் காய் நகர்த்தல்கள் என சாதுர்யமாக செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நேற்று பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

தனக்கு எதிராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தையும் முற்றிலுமாக ஓரம்கட்டும் வகையில் தனது ஆதரவாளர்கள் துணையோடு ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியைப் பறித்ததோடு, அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து நீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் எடப்பாடி. தன்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தாலும் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், ஓபிஎஸ் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதை பொறுத்து அமையும். ஆனாலும் ஜெயலலிதாவின் வலதுகரம் போல சுமார் 30 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றி வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதே கட்சியினரால் தூக்கி எறியப்பட்டு இருக்கிறார். இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமியின் சாதுரியமான செயல்பாடுகளும், அரசியல் காய் நகர்த்தலும் தான் காரணம் என்கின்றனர் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

Advertisment

அதேநேரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் ஏற்படுத்திய பொருளாளர் பதவியைக் கைப்பற்றப்போவது யார் என்ற கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கிறது. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்தவரும், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவருமான திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே பொருளாளர் பதவி குறித்த விவாதங்கள் எழுந்தபோது திண்டுக்கல் சீனிவாசனின் பெயர் அதில் இடம்பெற்றது. சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் பொருளாளர் பதவியைக் கைப்பற்ற தீவிரம் காட்டிய நிலையில் ஏற்கனவே பொருளாளராக இருந்தவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முன்னணி காரணங்களின் அடிப்படையில் பொருளாளர் பதவி அவருக்கு கிடைத்து.

 Dindigul Srinivasan has won the post of treasurer again!

ஏற்கனவே அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்த சீனிவாசன் சில குற்றச்சாட்டுகள் காரணமாக அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பொருளாளர் பதவி வகித்த போதே தொடர்ந்து பல ஆண்டுகள் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றியவர். அதன் பின்னர் டிடிவி தினகரன் தலையீடு காரணமாக பொருளாளர் பதவியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்பட்டார். அதன் பின்னர் திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன் எழுச்சியின் காரணமாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வனவாசத்தை அனுபவித்தார்.அதன் பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் சசிகலா தரப்பு ஆதரவு காரணமாக மீண்டும் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் வனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தனது அதிரடி செயல்பாடுகளால் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களை ஓரங்கட்டிய அவர் தர்ம யுத்தத்தின் போது எடப்பாடி தரப்பில் நின்றார். தொடர்ந்து கூட்டணி முடிவு எடுப்பது முதல் பேச்சாளர், வேட்பாளர் தேர்வு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்டவற்றில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டார்.

ஓ.பி.எஸ்.விவகாரத்தில் பொருளாளர் பதவியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என முன்னணியிலிருந்தார். அப்போது ஏற்பட்ட சில சறுக்கல்கள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது அதிருப்தியில் இருந்தாலும் ஓபிஎஸ் முக்குலத்தோர் அமைப்பைச் சேர்ந்தவர், திண்டுக்கல் சீனிவாசனும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையிலும்ஏற்கனவே பொருளாளர் பதவி வகித்தவர் என்பதாலும்தற்போது பொருளாளர் பதவியை மீண்டும் சீனிவாசன் தக்க வைத்துள்ளார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe